Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

வாட் வரியை குறைத்த தமிழக அரசு - விமான Ticket குறைய வாய்ப்பு?

வாட் வரியை குறைத்த தமிழக அரசு - விமான Ticket குறைய வாய்ப்பு?

விமான நிறுவனங்களின் மொத்தச் இயக்கச் செலவில் பொதுவாக 30 முதல் 40 சதவீதம் வரை விமான எரிபொருளுக்காகச் செலவிடப்படுகிறது.

பகிரவும் WhatsApp Facebook

விமான நிறுவனங்களின் இயக்கச் செலவைக் குறைக்கும் வகையில், விமான எரிபொருள் மீதான மதிப்புக் கூட்டு வரியை தமிழக அரசு அதிரடியாக குறைத்துள்ளது. இதனால், விமானக் கட்டணங்கள் குறையும் என பயணிகள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.

சென்னையில் எரிபொருள் நிரப்பும் திட்டமிடப்பட்ட விமானங்களுக்கு வாட் வரி 29 சதவீதத்தில் இருந்து 16 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், திருச்சி, மதுரை உள்ளிட்ட மற்ற விமான நிலையங்களில் அதிகபட்சமாக 40,000 கிலோவுக்கும் குறைவான புறப்பாட்டு எடையைக் கொண்ட சிறிய விமானங்களுக்கான எரிபொருள் மீதான வாட் வரி 5 சதவீதத்தில் இருந்து 1 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த வரிச் சலுகைகள் 2027, அக்டோபர் 31 வரை ஓராண்டுக்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உயரும் எரிபொருள் செலவு

விமான நிறுவனங்களின் மொத்தச் இயக்கச் செலவில் பொதுவாக 30 முதல் 40 சதவீதம் வரை விமான எரிபொருளுக்காகச் செலவிடப்படுகிறது. ஆனால், அமெரிக்கா – ஈரான் போர் காரணமாக சமீபகாலமாக எரிபொருள் விலை உயர்ந்து வருவதால், இந்தப் பங்கு 55 முதல் 60 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. மேலும், சர்வதேச அளவில் வான்வெளிப் பயன்பாட்டுக்கான கட்டுப்பாடுகளும், எரிபொருள் விலை உயர்வும் விமான நிறுவனங்களுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன.

கட்டணம் குறையுமா?

விமான எரிபொருள் மீதான வாட் வரி குறைக்கப்பட்டுள்ளதால், தமிழக விமான நிலையங்களில் எரிபொருள் நிரப்பும் விமான நிறுவனங்களின் செலவுகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், செலவுக் குறைப்பு பயணிகளுக்கான விமானக் கட்டணத்திலும் பிரதிபலிக்குமா என்பது இனிமேல்தான் தெரியவரும். வரிச் சலுகையால் கிடைக்கும் பயனை விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு வழங்கினால், குறிப்பிட்ட வழித்தடங்களில் விமானக் கட்டணங்கள் குறைய வாய்ப்புள்ளது.

மத்திய அமைச்சர் நன்றி

தமிழக அரசின் வாட் குறைப்பு நடவடிக்கைக்காக, மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், விமானப் பயணத்தை மக்களுக்கு மலிவானதாக மாற்றுவதற்கு மத்திய அரசும், மாநில அரசுகளும் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்றும், பயணிகளின் நலனே இரு அரசுகளின் பொதுவான முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

விமான எரிபொருள் மீதான வாட் வரியைக் குறைத்த தமிழக அரசுக்கு ஏர் இந்தியா நிறுவனம் நன்றி தெரிவித்துள்ளது. தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், வாட் வரி குறைப்பு மூலம் விமான நிறுவனங்களின் இயக்கச் செலவுகள் குறைவதுடன், விமானப் போக்குவரத்து இணைப்பும் மேம்படும். மேலும், தமிழகத்தில் தனது விமான சேவைகளை விரிவுபடுத்தி, மக்களுக்கு சிறந்த சேவை வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

முந்தைய செய்தி
கனமழை முன்னெச்சரிக்கை: நெற்பயிர்களை பாதுகாக்க அரசு உத்தரவு
அடுத்த செய்தி
பஞ்சு இறக்குமதி வரி விலக்கு தொடர வலியுறுத்தல்

தொடர்புடைய செய்திகள்